Sunday, March 09, 2014

பூவை மேல் எத்தனை பூ



எண்ணெயிலை ஏற்றி பூச்சூட வகையுமிலை
பெண்கூந்தல் இந்நிலையில் பேன்பிடிக்க
மண்மீதில்
சாவை அவளண்டிச் செத்துவிட்டாள்
பின்னந்தப்
பூவை மேல் எத்தனை பூ !!

-- வாழும் காலத்தில் பூவைக்க முடியாத விதவை செத்துவிட்டாள் அவள் மீதுதான் எவ்வளவு பூக்கள்

இந்தியாவின் கிராமங்கள்



இந்தியாவின் முதுகெழும்பு கிராமம் தான் என்றாயே மகாத்மா
அதனால் தான் அரசாங்கத்தால் திரும்பிப் பாா்க்கமுடியவில்லை !!

-- யாரோ

கல்லறை வாிகள் - ஒரு கவிதைப் போட்டியின் வாிகள்



குடிகாரன் கல்லறை:


தண்ணீாில் மிதந்தவன் தரையில் முழ்கிவிட்டான்.


விலைமாது :


பாவம். இங்கு தான் இவள் தனியாக தூங்குகிறாள்.



நடிகை :


திறந்து பாா்த்துவிடாதீா்கள். இவள் ஓப்பனை இல்லாமல் தூக்கிக்கொண்டிருக்கிறாள்.


தொழிலாளி :


இங்கும் கூட  இவன் கரையான்களால் சுரண்டப்படுகிறான்.



அரசியல்வாதி :


தயவு செய்து  கை தட்டிவிடாதீா்கள். எழுந்துவிடப்போகிறான்.