Tuesday, May 23, 2023

ராஜேந்திர சோழனும் கஜினியும் - குழந்தைகள் பள்ளி நாடகக் கதை

 1018 ஆம் ஆண்டு. இந்தியா மீது ஆண்டு தோறும் படையெடுத்து வந்த கஜினி,
படிப்படியாக முன்னேறி மதுரா நகரைப் பிடித்தான் கஜினி.
அதே ஆண்டில் தெற்கிலிருந்து புயலெனப் புறப்பட்டான் ராஜேந்திர சோழன்.
ஓரே மூச்சில் வங்காள தேசம் வரை வென்று திரும்பியது ராஜேந்திர சோழன் படை.

இரு படைகளும் 500 மைல் இடைவெளி வரையில் நெருங்கி வந்துள்ளன. ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு
கண்டிப்பா தெரிந்திருக்கும். இதனை அடிப்படையாக கொண்டு இந்த நாடகத்தை வழங்குகிறோம்.


காட்சி 1 : கஜினியின் கூடாரம்

கஜினி & மாலிக் ஆயாஷ், தளபதி 1 தளபதி 2

கஜினி: வெற்றி வெற்றி... முதலில் பெசாவர், பின் லாகுர், குவாலியர், இப்போது மதுராவிலும் வெற்றி

மாலிக் :  மன்னரே ( பொன்னாடை போர்த்துகிறார்)

க; எதற்காக இப்போது போர்த்துகிறீர் ?

ம: மன்னரே இது உங்களுடைய பத்தாவது திருட்டு

க: அப்படியா … கணக்கில் புலிகளடா நீங்கள்

த:; ஆம் ..மன்னா.. உங்களிடம் வேலை பார்ப்பது ஏதோ பைனான்ஸ் கம்பேனியில் வேலை பார்ப்பது போல் உள்ளது

த2: வர்றோம்.. கொள்ளையடிக்கிறோம்.. ரிப்பீட்டு.. வர்றோம்.. கொள்ளையடிக்கிறோம்.. ரிப்பீட்டு
--- ஆடுகிறார்கள்

ம:  சீனர்கள் 13 ஆயிரம் மைல் நிளத்திற்கு சுவர் கட்டிவிட்டார்கள். ஒரு வேளை இந்த மன்னர்களும் மூன்று மைல் அகலமுல்ல கைபர் கணவாயை
அடைத்தால் என்ன செய்வது.. ?

க: அப்படி எல்லாம் நடக்காது. பாசக்கார பயலுக. நாளப்பின்ன நாம் வந்து போகனும்கிறதுக்காக எப்படியும் திறந்து தான் வைத்திருப்பாங்க

த: மன்னா.. மக்களின் கிட்னி முதல் சட்னி வரை அனைத்தையும் புடுங்கிவிட்டோம் ..

க: மகிழ்ச்சி.. அடுத்து மேலும் தெற்கே செல்வோமா.. ?

த2: வேண்டாம் மன்னா..வேண்டாம்.. அங்கு ராஜேந்திர சோழன் இருக்கிறான்

க: ராஜேந்திர சோழனா .. யாராய் இருந்தால் என்ன .. ஒரு கை பார்த்துவிடுவோம்.

த: வேண்டம் மன்னா.. நம்மை போல் 10 சொங்கிகளை அடித்து மாவீரன் ஆனவன் இல்லை. அவன் அடித்த 10 பேரும் மாவீரர்கள் தான்

க: அப்படியா ?

த: வேங்கி, ராஸ்டரகுடா, சாலுக்கியா, கலிங்கம் தொடங்கி வங்கதேச அரசன் வரை வென்றவன். இப்போது கடாரம், பூர்வ தேசத்தையும் வெல்ல போயிருக்கிறான்.

த1: ஆம் மன்னா.. நம்மை விட 3 மடங்கு பெரிய படையை உடையவன்.. அவனிடம் மோதினால் .. நம்மை நசுக்கி விடுவான்.

த2: அதுவும் இல்லாமல் உங்களை விட 1 வயது இளையவன்.. சின்னப் பையனிடம் கொட்டு வாங்கினால் கேவலம் மன்னா

க: சுனா பானா. அப்ப சத்தமில்லாம ஒன்னொடு கெத்து அப்டியே மைன்டைன் பண்ணிக்கடா.

த: நம்மை போல் தரையில் மட்டுமல்ல.. கடலிலும் சென்று பல நாடுகளை பிடித்திருக்கிறான்.

க: நம் ஒற்றர் படையை கூப்பிடு..

க: யாருயா அவரு.. எனக்கே அவரப் பார்க்கனும் போல இருக்கே....

----------------

காட்சி 2: தஞ்வாவூரில் உள்ள ராஜ ராஜ பெருவழி.. கஜினியின் ஒற்றர்கள் சோழ நாட்டுக்குள் வருகிறார்கள்

 (பொன்னி நதி பாக்கனுமே !!)

ஒற்றன்1 : என்னடா சோளத்தை கையில் வைத்திருக்கிறாய்.

ஒற்றன் 2 : (சோளத்தை கீழே போட்டு விட்டு ) இது எந்த நாடுன்னு சொல்லு ?

ஒற்றன் 1 : .....?

ஒற்றன் 2:  சோழ நாடு..

ஒற்றன் 1: பிராப்பர்டி காமெடியெல்லாம் மதுரை முத்து சொன்னால் தான் சிரிப்பார்கள். உனக்கெதுக்கு இந்த வேலை ? அதோ பார் அழகாக பெயர் போட்டிருக்கிறார்கள்..
இது ராச ராச பெரு வழி.. அப்படி என்றால் தஞ்வாவூர் தான் இது. அதோ அவரிடம் அரண்மனை எங்கே என்று கேட்போம்

ஒற்றன் 2: ஐயா மன்னரின் அரண்மனைக்கு எப்படி செல்வது

விவசாயி 1: மன்னர் இப்போது தலைநகரை கங்கை கொண்ட சோழபுரத்துக்கு மாற்றி விட்டார்

ஒற்றன் 1: ஏன் .. ?

விவசாயி 2: தொடர் வெற்றிகளால் எங்கள் படையும் பணமும் பெருகிவிட்டது. நிறைய வணிகர்களும் வருகிறார்கள்.. அதனால் மன்னர் இடத்தை மாற்றிவிட்டார்

ஒற்றன் 2: ஏன் தஞ்சாவூரிலேயே நிறைய இடம் இருக்கிறதே ! இந்த விளைநிலங்களையும் ஏரியை அழித்து புதிய கட்டிடங்கள் கட்டலாமே..
அவனவன் ஏரியை அழித்து விமான நிலையமே கட்டுகிறான்..

விவசாயி 1: ஏர்ல பறந்தாலும் சோறு இங்க இருந்துதான் வருனும் தம்பி..
சோழ நாட்டில் இப்படி பேசினால் முட்டு சந்தில் வைத்து கும்மி எடுத்துவிடுவோம்.

ஒற்றன் 2: தீபாரதனை காட்டுபவன் கூட தீவிரவாதியா இருக்காங்கலே.. வா நாம் ஒடி விடுவோம்..

ஒற்றன் 1: ராசேந்திர சோழன்.. யாருயா அவரு.. எனக்கே அவரப் பார்க்கனும் போல இருக்கே



----------------


காட்சி 3:  ராஜ ராஜ சோழனின் குருவான கருவூர்த் தேவர் வீட்டிற்கு, தளபதி சோனகர் வருகிறார். கஜினியின் ஒற்றர்கள் வேவு பார்க்கிறார்கள்

கருவூர் தேவர் :
"ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்
    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்" -

சோனகன் : என்ன கருவூர் தேவரே.. தேவாரப் பாடல் பலமாக இருக்கிறது..

கருவூர் : வாரும் சோனகரே.. வடக்கே ஆரியம் வென்று , இங்கும் இலங்கையிலும் தமிழர் நிலங்களையும் வென்று ,
கடல் போல் நிறைந்த சோழ கங்கம் ஏரியையும் கொண்ட நம் ராசேந்திர சோழருக்காகவே எழுதிய பாடல் போல் உள்ளது.

சோனகன் :  இஸ்லாம் மதத்தை சேர்ந்த என்னை நீண்ட காலமாக உயர் பதவியில் வைத்துள்ள மன்னரின் மனம் ஏரியை விடப் பெரியது

கருவூர் : உன்னை மட்டுமல்ல சோனகா.. சிரிவிஜய மன்னருக்காக நாகையில் புத்த மத சூடாணி விகாரமும்..குந்தவை நாச்சியார் சமணர்களுக்காக திருமலை
 விஜயமங்கலத்தில் திருக்கொடையும் தந்துள்ளார்.

சோனகன் : ஆமாம்.. நம் மன்னர் சைவராக இருந்தாலும், வைனவர்களின் முதல் நூலான நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திருவாய்மொழியும்
இப்போது தான் வெளியாகியுள்ளதே.

கருவூர் : எங்கு போனாலும் அங்கிருக்கும் கடவுள்களையும் இங்கே கொண்டுவந்து விடுகிறார்.
சாளுக்கிய நாட்டிலிருந்து துர்கையும், நவகிர பீடமும், சூரிய தேவரும், பால நாட்டிலிருந்து விநாயகர் சிலையும், கலிங்க நாட்டிலிருந்து பைரவரும்
நம் கோவில்களுக்கு புதிதாக வந்திருக்கிறார்க்ள.  

கருவூர்: இங்கே இப்படி.. வடக்கே வந்த ஒரு மன்னன் வேற்று மத ஆலயங்களை தேடித் தேடி அழிக்கிறானாம்.
கடவுள் தான் மனிதனை காக்க வேண்டும்.. மனிதனால் கடவுளை காக்க முடியுமா ? முட்டாள்கள்..

ஒற்றன் 2: தளபதி .. அவர்கள் நம்மைதான் கேவலமாக பேசுகிறார்க்ள்

ஒற்றன் 1: தெரியுது .. தெரியுது.. ராசேந்திர சோழன்.. யாருயா அவரு.. எனக்கே அவரப் பார்க்கனும் போல இருக்கே..

--------

காட்சி 4: கங்கை கொண்ட சோழபுரம். சோழ வணிகர்களும் கஜினியின் ஒற்றர்களும் சந்திக்கிறார்கள்.


ஒற்றன் 1: என்னம்மா விற்கீறீரகள் ?

கிழவி: 1 காசுக்கு எட்டு கலம் நெல்.. 1 காசுக்கு 9 ஆடு.

ஒற்றன் 2: நெல்லை விட ஆட்டின் விலை குறைவா இருக்கே.. இனி சோழ தேசம் விட்டு போகும் வரை கறிக்கஞ்சி தான்..   

ஒற்றன் 1: யாருடா நீ.. சோற்றுக்கு செத்தவனாக இருக்கிறாயே

கிழவி: எங்கள் மன்னர் ஆடு மாடு மேய்பதை "சாவா மூவா ஆட்டுத்" திட்டத்தின் மூலம் அரசுத் தொழிலாக ஆக்கிவிட்டார்.. அதனால் நெய்யின் விளையும்,
ஆட்டின் விளையும் மிகவும் குறைந்து விட்டது.

ஒற்றன் 1: என்ன பாட்டி, கம்பி கட்டிய கதையெல்லாம் சொல்வாய் போல.. எங்கள் ஊர் மன்னனும் வீரமானவர் தான்.. அதற்காக இப்படியா புகழ்கிறோம்

கிழவி: நாங்கள் புகழ்வதற்கு காரணம் மூன்று உள்ளது. அது உங்கள் மன்னனிடம் உள்ளதா என்று சொல் ..

ஒற்றன் : வா பாட்டி.. சோடி பொட்டுக்குவோம் சோடி..

கிழவி 1 : "அந்த க.கொ.சோழபுரம் கோவில் கல்வெட்டில் நான் செய்த சிறிய கொடைக்கு என் பெயரும் மன்னருக்கு நிகராக இருக்கிறது..
சமையல் செய்பவர் முதல் நாவிதர் வரை அனைவரின் பெயரும் உண்டு. இதோ ராசேந்திரன் அரண்மனை மாளிகை மேடு..
இவ்வளவு வென்ற மன்னன் இத்தனை சிறிய மர வீட்டில் இருக்கிறான். உங்கள் மன்னர் இப்படிபட்டவரா ?"

ஒற்றன் 1: எங்கள் மன்னர் திவான்களையே மதிக்க மாட்டார்.. நெக்ஸ்ட்டு..

கிழவி 2: "பெண்களை மதிப்பவர். திரிபுவன ஈஸ்வரம், பரவை நாச்சியார், வானமா தேவி, குந்தவை
என சோழப் பெண்களை முன்னிறுத்தி பல கோயில்கள் கட்டியிருக்கிறார். பெண்களை அதிகாரச்சியாக நியமித்துள்ளார் எங்கள் மன்னர்"

ஒற்றன் 1: ம.ம்ம... நெக்ஸ்ட்டு..

கிழவி 2: " தன் தளபதிகளுக்கு வெற்றியில் பங்குகொடுத்து பட்டமும் கொடுத்துள்ளார். குடவோலை முறையில் எல்லோருக்கும் அதிகாரம் உண்டு.
தன் பெரியப்பா பெயரான மதுராந்தகன் என்பதே அவர் இயற்பெயர். கங்கை வரை படையெடுத்து சென்றது எங்கள் மன்னரின் தம்பி. சோழ வம்சத்தில்
அணணனும் தம்பியும் , நகமும் சதையுமாக உள்ளனர்.  "

ஒற்றன் : பதவி ஏற்றவுடன் எங்கள் மன்னர்கள் செய்யும் முதல் வேலை, அண்ணனையும் தம்பியையும் (கழுத்தை வெட்டி காட்டுகிறான்) .. நெக்ஸ்ட்..

கிழவி1: அவ்வளவுதான்பா

ஒற்றன்: ராசேந்திர சோழன்.. யாருயா அவரு.. எனக்கே அவரப் பார்க்கனும் போல இருக்கே..

கிழவி 1: உன் யோகம்.. அதோ எங்கள் மன்னர் வருகிறார்..

திருவன்னி வளர விருநில மடந்தையும்
தொண்டிரை யீழ மண்டல முழுவதும்
தொல்பெருங் காவற் பல்பழந் தீவும்
    பூசுரர் சேருநற் கோசல நாடும்
    திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும்
    தங்காத சாரல் வங்காள தேசமும்
    வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்
    அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச்
    தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும்
    மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி வன்மரான
    உடையார் ஸ்ரீராசேந்திர சோழதேவர்

ஒற்றன் : மன்னா வணக்கம்..

ரா: வாருங்கள் வணிகர்களே..

ஒற்றன் : உங்களைப் பார்த்ததும் எங்களுக்கு பொய் சொல்ல தோன்றவில்லை.. நான் கஜினியின் ஒற்றர்கள். உங்களோடு போருக்கு வர உளவு பார்க்க வந்தோம்.

ரா: அப்படியா

ஒற்றன் : ஆனால் இப்போது எங்கள் மன்னனை நினைத்து எங்களுக்கு வெட்கமாக உள்ளது.

ரா: ஏன்.. உங்கள் மன்னனும் சுத்த வீரன். பல அடிமைகளையும் தளபதியாக, மன்னனாக ஆக்கியவர்.. மத்திய ஆசியாவின் மகிப்பெரிய நூலகத்தை கட்டியவர்.
கற்றவர்களை போற்றுபவர். குறையும் நிறையும் எல்லா மதத்திலும் இருக்கும், மனிதனிலும் இருக்கும்.  
நல்லவற்றை கற்போம். நலம்பெற வாழ்வோம் !!. உன் மன்னனை வரச் சொல்.. போர்களத்தில் சந்திப்போம் !!

--- (கொடி கொடி பறக்க பாடல்)

Labels: , , , , , , , ,

0 Comments:

Post a Comment

<< Home