உடல்
'கடலோரம் தலை பிளந்து கிடந்த
உடல்.
இறப்பினும் மூட மறுத்த கண்களின்
நேர்கொண்ட பார்வையில் மிதக்கிறது:
எதிர்ப்பு.
ஆச்சரியம்.
தவிப்பு.
தந்தளிப்பு.
கொதிப்பு.
ஆற்றாமை.
முடிவற்ற ஒரு பெருங்கனவு.
இந்த உடல் எவரின் உடலமென்று வாசிப்பவருக்குச் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை.
‘காடாற்று’ சேரனின் கவிதைத் தொகுப்பு.